உயிரோடு விளையாடும் யாழ் பிரபல வைத்தியசாலையின் திருவிளையாடல் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான நொதேர்ன் வைத்தியசாலையில் கடந்த ஒரு சில வருடங்களாக நிகழும் பாரிய மோசடி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.

அரியாலையினை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ச்சியான முதுகு வலியினால் அவதிப்பட்ட நிலையில் பிரபல என்பு முறிவு வைத்தியரிடம் நொர்தேர்ன் வைத்தியசாலையில் ஆலோசனை பெற்ற நிலையில் MRI ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

MRI ஸ்கேன் ரிபோர்டினை அவ்வைத்தியரிடம் காட்டியபோது அவர் MRI ஸ்கேனில் பிரச்சனை ஒன்றும் இல்லை என கூறி சில நோய் நிவாரணி மருந்துகளை வழங்கினார்

ஆனால் முதுகு வலி தீர்ந்த பாடில்லை. அவர் மீண்டும் ஒருமாத காலத்தினுள் முன்பு யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு முறிவு வைத்தியராக வேலைசெய்து தற்போது காலி வைத்தியசாலையில் வேலை செய்யும் மருத்துவ நிபுணரை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கொழும்பின் தனியார் வைத்தியசாலையில் சந்தித்து வைத்திய ஆலோசனை பெற்ற போது அவர் முன்பு எடுக்க பட்ட MRI ஸ்கேன் தரம் குறைந்தது என்றும் மீண்டும் MRI ஸ்கேன் எடுக்க பணித்தார்.

அவர் கூறியவாறே மீண்டும் வேறொரு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் MRI ஸ்கேன் எடுத்தபோது நரிப்பகுதியில் உள்ள முள்ளந்தண்டில் இருந்து வெளியேறும் நரம்பு நசிப்படுவது கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் யாழ் நொர்தேர்ன் தனியார் வைத்தியசாலையில் விசாரித்தபொழுது அவர்களால் உரிய விளக்கம் தரப்படவில்லை.

இது பற்றி தனக்கு தெரிந்த வைத்தியர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான பலவிடயங்கள் தெரியவந்தன.

தற்பொழுது நொர்தேர்ன் தனியார் வைத்தியசாலையில் பாவனையில் உள்ள MRI ஸ்கேன் இயந்திரமானது முன்பு கொழும்பு (டேடன்ஸ்) தனியார் வைத்தியசாலையில் பாவிக்கப்பட்டு பலவருடங்களுக்கு முன்பே அதன் தரமின்மை காரணமாக பாவனையில் இருந்து நீக்கப்பட்டது.

அவ் இயந்திரம் பத்து வருடங்களுக்கு மேலாக பாவனையில் இருந்த ஒரு பழய கட்டமைப்பை கொண்டது, அத்துடன் அதன் கதிரியக்கம் அதிகமாக காணபடுவதன் காரணாமாயும், அதன் பாவனை காலம் கடந்துவிட்டதாலும், மேற்படி வைத்தியசாலையினால் நீக்கபட்டு உள்ளது

அவ்வியந்திரத்தினை குறைந்தவிலையில் கொள்வனவு செய்து அப்பாவி நோயாளிகளிடம் ஒரு MRI ஸ்கேனிற்கு 35000 ரூபா வீதம் அறவிடப்படுகின்றது.

ஆனல் இவ் இயந்திரத்தால் எடுக்கபடும் ஸ்கான்களை அவற்றின் தரம் இன்மை காரணமாக யாழ் போதனாவைதியசாலை கதிரியக்க வைத்தியர்கள் பயன்படுத்டுவது இல்லை.

அவர்கள் கொழும்பிற்கே நோயாளிகளை அனுபுவார்கள். குறித்த என்பு முறிவு வைத்தியர் முன்பு மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய பொழுது அரச வைத்தியசாலை நோயாளிகளை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சத்திரசிச்சை மேற்கொண்டு, வைத்தியசாலையினுள் கட்டணம் அறவீடு செய்தபோது சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் பிடிபட்டு யாழ்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் ஆவர்.

இவர் தற்பொழுது பருத்தித்துறை வைத்தியசாலையில் வேலை செய்யும் பெண் கதிரியக்க நிபுணருடன் சேர்ந்தே இவ்வாறான தரம்தாழ்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றார்.

இவர் தன்னிடம் வரும் பெரும்பாலான நாரி நோவு நோயாளிகளினை அப்பெண் மருத்துவரிடம் MRI ஸ்கேன் இற்கு சிபாரிசுசெய்கின்றார்.

மிக அண்மை காலத்தினுள் பெண் கதிரியக்க நிபுணர் அரச கடமை நேரத்தின் பொழுது அதே தனியார் வைத்தியலையில் கடமை செய்தமைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் கையும்களவுமாக பிடிபட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாறப்பட்டவர்.

மேலும் அவ் தனியார் வைத்தியசாலை உரிமையாளார் யாழ் போதனா வைத்தியசாலையின் நாரம்பியல் விடுதிக்கு பொறுப்பானவர் ஆவார், இவர் தனது விடுதியில் அனுமதிக்கபடும் அனைத்து பாரிசவாதம், மற்றும் தலையிடி , வலிப்பு நோயாளிகளையும், அதிகாரபூர்வமாக தனது தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி மேற்படி ஸ்கானை செய்கிறார்.

இவ்வைத்தியர்கள் யாவும் தெரிந்து கொண்டே பணத்திற்காக தரம் குறைந்த MRI ஸ்கேனினை செய்கின்றனர். எனவே பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்பாக செயற்பட வேண்டும்.