தினமும் இரவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்ட அண்ணன்- தம்பி.

கொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கடிதத்தை கொடுத்தார்.

அந்த கடிதத்தில், 15 வருடங்களுக்கு முன்னதாக பல்லிகன் பூங்கா பகுதியை சேர்ந்த சுரஞ்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்தது முதலே சுரஞ்சன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர் . அதோடு அல்லாமல், தினமும் இரவில் சுரஞ்சன் தன்னுடைய மனைவியை வற்புறுத்தி தம்பியுடன் குடும்பம் நடத்த வைக்க கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்தால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதேபோன்ற தன்னுடைய தம்பிநீலாஞ்சனின் மனைவியுடன் சுரஞ்சன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்ற பொலிஸார் அங்கு விசாரணை மேற்கொண்டதில், அண்ணன்- தம்பி இருவரும் மனைவிகளை மாற்றி குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் சுரஞ்சன் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தங்களுடைய குடும்பத்திற்கு கெடுதல் விளைவிக்க நினைத்து தவறான தகவலை அந்த பெண் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.