மக்களே உஷார்… யாழில் பாக்கில் போதை பொருள் கலந்து விற்பனை!

ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவார் போதைப்பொருள் கலந்த பாக்கினை விற்பனை செய்து வருகின்றார் என தெரியவந்துள்ளது.

இவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் மனைவியும் இவருடைய 10 வயது மகனும் போதைப்பொருள் பாக்கு விநியோகத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களிடம் போதைப்பொருள் பாக்கு வாங்குவதற்காக படித்த முதல் பாமர மக்களும் வயது வேறுபாடின்றி சின்ன சிறு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வந்து செல்கின்றனர்.

வாங்கி விட்டு செல்பவர்கள் வீதிகளில் நின்று மற்றையவர்களுக்கு தொந்தரவாகவும், அவதூறான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்க்கொள்கின்றனர்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உள்நாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும். நன்றி