வைத்தியரை ஊசி போட்டு போட்டுத்தள்ளிய வைத்திய நிபுணர். தனியார் வைத்தியசாலையில் சம்பவம்!!

அண்மைக் காலமாக மருத்துவ துறையினரின் அலட்சியத் தன்மையால் அப்பாவி நோயாளர்கள் பலியாவது நாளாந்தம் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு சேவை வளங்கும் ஒரு முக்கிய துறையாக இருந்த மருத்துவ துறை இன்று பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய துறையாக மாறியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

நோயின் கொடுமையோடு வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளிடமிருந்து எப்படியெல்லாம் பணத்தை கறக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பணத்தி கறந்து தங்களின் வயிற்றை கழுவும் ஒரு சில மருத்துவ துறையினரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கடந்த திங்கட் கிழமை கேணியா எனும் குடற் பிதுக்க நோயினால் அவதிப்பட்ட பிரபல வைத்தியர் ஒருவர் இலங்கையின் முக்கிய தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பரிசோதித்த மயக்க மருந்து நிபுணர் முள்ளந் தண்டில் ஊசி போட்டு இடுப்பிற்கு கீழே விறைப்பை ஏற்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

பின்னர் நாரியில் ஊசி போட்டு விறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சத்திரசிகிச்சை செய்யும் வைத்தியர்களை சத்திரசிகிச்சை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விறைப்பூசி போட்ட வைத்தியர் நோயாளியான வைத்தியரை கவனிக்காமல் வேறொரு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதற்காக சென்றுள்ளார்.

அனால் இடுப்பிற்கு கீழே விறைப்பதற்காக வளங்கப்பட்ட மருந்து இடுப்பிற்கு மேல்பகுதிக்கு சென்றதால் கணப்பொழுதில் நுரையீரல், இதயம் என்பன விறைத்து வைத்தியர் பரிதாபமாக பலியானார்.

இதனை அங்கிருந்த யாருமே கவனிக்கவில்லை என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.

பின்னர் சத்திர சிகிச்சை செய்ய தயாரான வைத்தியர்கள் வந்து பார்த்த போது நோயாழியான வைத்தியர் மூச்சடங்கி இருப்பதை கண்டு திகைத்தனர்.

உடனடியாக அவசர முதலுதவிகள் வளங்கப்பட்ட போதும் காலம் கடந்து போயிருந்த காரணத்தால் வைத்தியரை மீள எழுப்ப முடியவில்லை.

இவ் அபலச் சாவிற்கு முழுமையான காரணம் மயக்க மருந்தை வளங்கிய வைத்திய நிபுணரே ஆகும்.

பணத்தாசையால் ஒரே நேரத்தில் இரு நோயாளிகளிற்கு மயக்க மருந்து வளங்க முற்பட்டு ஒரு வைத்தியர் இறப்பிற்கு இவர் காரணமாக அமைந்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இச்சம்பவத்தை மூடி மறைக்க வைத்தியசாலை நிர்வாகம் போராடி வருகின்றது.

ஒரு வைத்தியரிற்கே இந்நிலை என்றால் சாதாரண மக்கள் விடயத்தில் எத்தனை அலட்சியங்கள் நடக்கின்றதோ என எண்ணி பார்க்கையில் மனதிற்குள் ஒருவித பயம் பற்றி கொள்கின்றது.

எது எவ்வாறாயினும் குறித்த வைத்தியரின் இழப்பிற்கு உரிய நீதி கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.