ஆனையிறவில் நடந்த கோரா விபத்து. ஆமி வாகனம் மோதி மூவர் பலி.

ஆனையிறவு இயக்கச்சிப் பகுதியில் சற்று முன் இடம் பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இராணுவ வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலி.

முச்சக்கர வண்டியும் இராணுவ வாகனமும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் இயக்கச்சியில் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றது. பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கரந்தாயைச் சேர்ந்த குகன் மற்றும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே விபத்தில் உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.