கொடூர விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்.

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு மோட்டார் சைக்கிளுடனும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதியைச் சேர்ந்த இராசதுரை ஜீவநாதன் என்ற இளம் குடும்பத்தலைவரே இந்த விபத்தில் உயிரிழந்தார் என்றும்அவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே திருமணமானவர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.