புதிய அப்டேட்டுடன் தெறிக்கவிடும் பப்ஜி - PUBG.

உலகம் முழுக்க முதலிடத்தில் இருக்கும் பப்ஜி கேம் தற்போது, புதிய அப்டேட்டில் வந்துள்ளது. இது கேம் பிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் களமிறங்கியுள்ளது.

இது பல்வேறு மாற்றங்களுடன் பட்டையை கிளப்ப துவங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட் 0.10.5 என்று வெளியாகி இருக்கின்றது. இதில் பல்வேறு மாறங்களும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் போர்ட் நைட் வருமானத்தை விட 43 சதவீதம் அதிக வருவாயை பப்ஜி ஈட்டியுள்ளது. பப்ஜிக்கு அதிக வருவாய் தரும் டாப் இடங்களில் ஆசியா முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது. வெறும் 30 சதவீத வருவாய் மட்டுமே அமெரிக்கா தருகிறது.

பப்ஜி கேமை ஆசியாவில் அதிகம் பேர் விளையாடுகின்றனர். சிறியோர் முதல் பொரியோர் வரை அதிகம் பேர் விளையாடி வருகின்றனர். பப்ஜி கேமை இந்தியாவில் அதிகம் பேர் விளையாடி வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டில் தற்போது புதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. குறைகளை நிவர்த்திய செய்து புதிய பரிமாணத்துடன் களமிறங்கியுள்ளதால், அனைத்து கேம் பிரியர்களையும் மகிழ்ச்சியடை செய்ய வைத்துள்ளது.

மினி பஸ் மற்றும் யூ.ஏஇஜட் வாகனங்களுக்கு பதிலாக அதி நவீன மூன்று வில் கொண்ட வாகனம் புதிதாக வந்துள்ளது.

7.62 மில்லிமீட்டர் புல்லட்கள் பயன்படுத்தப்படும் புதிய ரக அதிநவீன எம்கே 47 துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிநவீன மேப் போன அப்டேட்டைக் காட்டிலும் மேம்படுத்தவும் வழிகாட்டவும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆன்லைனில் இணைந்திருக்கும் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களுடன் பேச வித்தியாசமான குரல்கள் கிளாஸிக் குரல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் எதிரிகளின் கால்தடங்களை கண்டுபிடிக்க உதவுகி செய்கின்றது இந்த அப்டேட்.

பிப-19 பைஸன் ஆயுதம் மற்றும் ஜி36சி மிஷின் கன் புதிதாக அறிமுகமாகிறது.

புதிய மூன்லைட்மோட், பனி காலநிலை அளவு கணக்கிடும் வசதி ஆகிய இடம்பெற்றுள்ளது.

இந்த விளையாட்டினை தரவிறக்க [##Download##டவுன்லோட்]