யாழில் “அம்மா அப்பா” விளையாட்டு எனக்கூறி 13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 46 வயது சித்தப்பா!

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் சித்தப்பாகைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டபகுதியில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சித்தப்பா முறையிலான 46 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்

சிறுமியின் தாய் இரண்டாம் தாரமாக மணந்து கொண்ட நபரே (சித் தப்பா) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வயிற்றுக் குத்து என்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் சிறுமி சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை மருத்துப் பரிசோதனைகளில் அறிந்து கொண்ட மருத்துவர்கள் சிறுமியை விசாரித்த போது சித்தப்பா அம்மா அப்பா விளையாட்டு எனக்கூறி பல தடவை துஸ்பிரயோகம் செய்துள்ளார் இதனை அடுத்து வைத்தியர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

காங்கேசன்துறைப் பொலிஸார் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு விடயத்தைப் பாரப்படுத்தினர்.

பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேக நபரான சித்தப்பாவை நேற்று மாலை கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.