பசியில் கங்காருவை உயிருடன் அப்படியே விழுங்கிய 13 அடி ராட்சத மலைப்பாம்பு! கமெராவில் சிக்கிய காட்சி

அவுஸ்திரேலியாவில் கங்காருவை சுமார் 13 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு அப்படியே முழுங்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அவுஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பருவ மழை தீவிரமடைந்ததால், அங்கிருக்கும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக வின்ஸ் லேன்டில் உள்ள அணை திறந்து விடப்பட்டது, இதனால் அணைகளில் இருந்த முதலைகள், பாம்புகள் போன்றவை தெருக்களில் உலா வந்தன.

அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு சில மலைப்பாம்புகள் குயின்ஸ்லேண்டில் ஒரு சில பகுதிகளில் சுற்றி வருகின்றன.

இதனால் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை மலைப்பாம்புகள் விழுங்கி வருகின்றன.

கடந்த வாரம் கூட, ஒரு நாயை மலைப்பாம்பு விழுங்க முயன்றது, உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதல், காப்பாற்றப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் இதே போன்று ஒரு சம்பவம் குயின்ஸ்லாந்தில் நடந்துள்ளது. அங்கிருந்த கங்காருவை 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு அப்படியே உயிருடன் விழுங்கியதால், நகர முடியாமல் அந்த இடத்தில் நிற்கிறது.

இதை அங்கிருக்கும் நபர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.