யாழில் அம்மா இறந்த சோகத்தில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி!!

தாயார் இறந்த சோகம் தாளாமல் மகளான இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (25) இந்த சம்பவம் இடம்பெற்றது. தற்கொலை செய்த யுவதியின் தாயார் நான்கு நாட்களின் முன்னர் உயிரிழந்திருந்தார். 

அதனால் மனமுடைந்திருந்த யுவதி, இன்று காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கைதடியை சேர்ந்த கணேசலிங்கம் அருட்சிகா (21) என்பவரே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். 

யுவதியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close