3 வயது குழந்தையுடன் தாயை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த இளைஞன்.

வேளாங்கன்னி மாவட்டத்தில் திருட்டுகுமார் என்ற ரவுடி பெண் ஒருவரை ஓட ஒட வெட்டிக்கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்தவேலனின் மனைவி சரண்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. பூக்கடை நடத்தி வரும் சண்யாவிடம் ரவுடி திருட்டுகுமார் அத்துமீற முயன்றுள்ளார்.

சரண்யாவுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதை சரண்யா தனது கனவரிடம் கூற, சரண்யாவின் கணவர் ஆனந்தவேலனுக்கும், திருட்டு குமாருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும், திருட்டுகுமார் பொய்யான புகாரை சரண்யாவின் கணவர் மீது கொடுத்து அவரை சிறைக்கு அனுப்பியுள்ளார். பொலிசாரும் ரவுடிக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

கணவர் சிறையில் இருந்த நேரம் பார்த்து, சரண்யாவின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிகுமார் கத்தியால் வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது குழந்தையுடன் தெருவில் ஓடியுள்ளார்.

ஆனால், அச்சத்தில் அக்கம்பக்கத்தில் காப்பாற்ற முன்வரவில்லை.

கொலை செய்துவிட்டு எங்கும் தப்பித்து செல்லாமல், துணிச்சலோடு தனது வீட்டிலேயே சர்வ சாதாரணமாக உட்காந்திருந்த ரவுடி திருட்டு குமாரை, பொலிசார் கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close