முகமூடிக் காவாலிகளின் அட்டகாசம்! – இளைஞனுக்கு வாள்வெட்டு

ஆறு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் ஒன்று, இரவு யாழ்ப்பாணம், இளவாலை கவுணாவத்தை ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

வீட்டிலிருந்து உந்துருளியையும் களவாடிச் சென்றுள்ளது. வாள் மற்றும் கொட்டன்களுடன் மூன்று உந்துருளிகளில் 6பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அச் சமயத்தில் வீட்டில் 3பேர் இருந்ததாகவும் அவர்கள் அச்சத்தால் வெளியில் வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுக் கண்ணாடிகளை உடைத்து,பொருள்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்த கும்பல் வீட்டிலிருந்த உந்துருளிளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

வீதியில் செல்லும் போது பாதையில் வந்த நபரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த இளைஞன், தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.