யாழ் புங்குடுதீவு சுடலைக்குள் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்!!

நேற்றுமுன்தினம் புங்குடுதீவில், குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது புங்குடுதீவு 7ம்வட்டராத்தைச் சேர்ந்த ஐயம்பிள்ளை விஷயகாந் (காந்தி) வயது 47 என்பவர் ஊரைதீவு சுடலை (இடுகாடு)க்குள் உள்ள பூவரசம் மரத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்..

இரவு 8மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் மற்றும் யாழ்ப்பாண பகுப்பாய்வு பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்கள். பின்னர் உடலம் மேலதிக விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று 07/02/2019 சட்டவைத்திய நிபுணர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.