யாழ் மாநகர சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல்.

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு இன்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாளுகளுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

அதன் போது தாக்குதல் குழுவிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து சில நிமிடங்கள் குறித்த வாள் வெட்டுக்குழு வீட்டில் அட்டகாசம் புரிந்து விட்டு அங்கிருந்து விலகி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், உறுப்பினரால் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.