யாழில் ரயிலில் மோதி துண்டாகிய இளைஞன்.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த
தபால் தொட­ ருந்து மோதி­ய­தில் இளை­ஞன் ஒரு­வன் படு­கா­ய­மடைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் அதி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.

கொடி­கா­மத்­தைச் சேர்ந்த மகா­லிங்­கம் ஜெய­ரூ­பன் (வயது-21)
என்­ப­வரே இவ்­வாறு ஆபத்­தான நில­மை­யில் மருத்­து­வ­ம­னை­யில்
சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

நேற்று இரவு 7.45 மணி­ய­ள­வில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.
நண்­பர்­க­ளு­டன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்­த­வர், திடீ­ரென தொட­ருந்­துக் கட­வையை கடக்க முற்­பட்­ட­போதே விபத்­தில் சிக்­கி­யுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.