முன்னாள் அரசியல் போராளி திரு இ.ம. அன்பரசன் மீது வாள்வெட்டு தாக்குதல்...

மீசாலை வடக்கு இராமாவில் முகாம் வீதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் போராளி இ.ம. அன்பரசன்(செல்வராசா) அவர்களின் வீட்டு வாசலில் கடந்த சனிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் தமது மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது என உதவிக்கு அழைப்பது போல் அழைத்து கொட்டன்களினாலும் தடிகளினாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

துணைவியார் கதறியழுத சத்தம் கேட்டு தந்தையை காப்பாற்ற முயன்ற அவரது மகன் செல்வரஜீபன் என்பவரை வாள்களால் வெட்டிவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாருக்கும் எவ்வித தீங்கும் செய்து யார் உதவிக்கு அழைத்தாலும் உரிய நேரத்தில் உடன் சென்று உதவும் பண்புள்ள மனிதர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலால் கிராம மக்கள் மிகவும் மாணவருத்தப் படுவதனை காணமுடிகிறது.

புனர்வாழ்வு பெற்று வந்து மிகவும் அமைதியாகவாழ்ந்து வரும் இவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உரியவர்கள் உரியநடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.