நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒனிறின் புதிய 152 ரூபாவாகவும், 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதுவரை 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.