ஈழத்தில் மீண்டும் தயாராகும் தூக்கு மேடை! பலருக்கு உடனடி மரணம்!!

அலுகோசு பதவிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் விண்ணப்பங்களை கோரப்படவுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதியினால் எடுக்கப்படவுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என திணைக்களம் கூறியுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை, தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக ஒழுங்குபடுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாகவே,

இந்த பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.