Loading... Please Wait.

இரவில் இளம்பெண் செய்த செயல். பதற்றத்தில் மக்கள்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து யுவதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. எனினும், குறித்த யுவதியை அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

அண்மைக் காலமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மாநகரசபையில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வதை தடுப்பது குறித்து பேசப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் தற்கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பில் கடந்த ஆண்டு மாத்திரம் 90க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

close