உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சூடான கல்லால் துடைத்தெடுக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட சிறுமிகளின் மார்பகம்.

ஆண்களின் கவனத்தில் இருந்து தப்புவதற்காக பிரித்தானியாவில் 1000க்கும் அதிகமான பெண்கள் தங்களுடைய மார்பகங்களை சூடான கற்களால் துடைத்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆண்களின் கவனம் தங்கள் மீது திரும்ப கூடாது என்பதற்காக பிரித்தானியாவை சேர்ந்த 1000க்கும் அதிகமான பெண்கள் தங்களுடைய மார்பகங்களை துடைத்தெறிந்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு சென்றால் இதற்கான செலவு அதிகரித்துவிடும் என்கிற அச்சத்தால், சிறு வயதிலே சூடான கற்களை கொண்டு மார்பகங்களின் மீது தேய்த்து துடைத்தெறிகின்றனர்.

இந்த சம்பவத்தால் தான் அடைந்த வேதனை குறித்து சிமோன் என்கிற இளம்பெண் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், எந்த ஒரு ஆண் நபரின் கண்களும் என்னை உற்றுநோக்க கூடாது என்பதற்காக 13 வயது நடக்கும் போது சூடான கற்களை கொண்டு என்னுடைய தாய் மார்பை துடைத்தெடுத்தார்.

இது உண்மையில் ஒரு முறைகேடு. மனிதருக்கு இருக்கும் குணங்களை பறிக்கும் செயல். அவர்கள் உங்கள் கைகளை பிடித்துகொண்டு சூடான கற்களால் மார்பில் அழுத்துவார்கள். இது மிகவும் வேதனையளிக்கும்.

உங்கள் உடலில் ஒரு சூடான பொருளை வைத்து அழுத்தினால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ஒரு இறுக்கமான பெல்டால் மார்பகத்தை கட்டி வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் மூச்சுவிடுவதற்கு கூட சிரமாக இருக்கும்.

இது நீண்டகாலமாக உங்களை பாதிக்கும். கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். என்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கூட சாதாரணமாக கொடுக்க முடியாது என வேதனை தெரிவித்துள்ளார்.

தாய்மார்கள் மற்றும் பாட்டியர்களால் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட இந்த கொடூர செயல்கள் தற்போது பிரித்தானியாவில் அதிகரித்திருப்பதை நினைத்து அரசு வேதனை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் இதனை சேர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.