ஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.

ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 94 கிராம் ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களனி பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் வாடகைக்கு வீடொன்றை பெற்று அதை போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த வீட்டில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்த 16 கைப்பேசிகள் மற்றும் 19 சிம் அட்டைகள் உள்ளிட்ட உபகரணங்கள் சில காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 22 வயதுடைய பெண்ணொருவரும் 28 மற்றும் 30 வயதுடைய சகோதரர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close