Loading... Please Wait.

நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை!!

அம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாயத்திற்கு விவசாயமே செய்து வந்துள்ளார்.

சிறிது காலம் சென்ற பின்னர் இராணுவத்தில் இணைந்துக்கொள்கின்றார். இராணுவத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் திருமணமும் செய்துக்கொள்கின்றார்.

சிறிது காலம் சென்றதும் வசந்தன் 3 பிள்ளைகளுக்கு தந்தையாகின்றார்.தனது பிள்ளைகளின் நலனுக்காக இராணுவத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடு திரும்புகிறார.

வசந்தன் இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடு ஒன்று காணப்படுகின்றது.

குறித்த வீட்டில் வசந்தன் அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

சிறிது காலம் சென்றதும் அந்த வீட்டினை விற்கின்றார் வசந்தன். பின்னர் வெயாங்கொடை பகுதிக்கு சென்று அங்கு வீடொன்றினை விலைக்கு வாங்கி வசிக்கின்றனர்.

குடும்ப செலவீனங்களுக்காக வெயாங்கொடையிலும் விவசாயமே செய்கின்றார் வசந்தன்.அவரின் விவசாய உற்பத்திகளுக்கு உதவியாக வசந்தனுக்கு உதவியாக வில்சன் என்ற நபர் ஒருவர் உதவி புரிந்து வருகின்றார்.

வசந்தன் மற்றும் வில்சன் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த நட்பினை பேணி வந்தனர்.இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை… வில்சன் குடும்பத்தினருக்கு வசந்தன் விருந்தளிப்பதும் வசந்தன் குடும்பத்தினருக்கு வில்சன் விருந்தளிப்பதுமாக தங்களது நட்பினை தொடர்ந்தனர்.

இந்நிலையில் வில்சனின் மனைவி மீது வசந்தன் காதல் கொள்கிறார்.வசந்தனின் பிள்ளைகளும் சமூகத்திற்கு அடையாளம் காண்பிக்கும் வகையில் நன்கு வளர்ந்தவர்கள்.

இந்நிலையில், வசந்தன் மற்றும் வில்சனின் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் காதல் அதிகமாகியது.

வழமையை போன்று ஒரு பௌணர்மி தினம் வசந்த வெள்ளை நிற ஆடை அணிந்து வெளியில் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது…. கையடக்க தொலைபேசி ஒலிக்கின்றது.

அந்த சந்தர்ப்பத்தில் வசந்தனின் மனைவியும் அருகில் நிற்கின்றார்… திடீரென ‘ உங்களுடைய போனை ஆன்சர் பண்ணுங்க… அவள்தான் கோல் எடுக்கிறாள்… கோயிலுக்கு போகத்தானே போய் வாருகங்கள்… நான் இருந்தால் என்ன…? எடுத்து பேசுங்கள்’ என்று வசந்தனின் மனைவி உயிர்நீத்த குரலில் உலறியபடி அவ்விடம் விட்டு நகர்கின்றாள்.

சுத்தமான ஆடை அணிந்து கோயிலுக்கு செல்ல புறப்பட்ட வசந்தன் தன்னுடைய உந்துருளியை எடுத்துகொண்டு வில்சனின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியை அழைத்தவாறு உந்துருளியிலிருந்து இறங்க முயற்சிக்கின்றார்.

அப்பொழுது எதிர்பாராத வகையில் முகத்தை மூடிக்கொண்டு நபர் ஒருவர் வசந்தனை நோக்கி ஓடி வருகின்றார்.வசந்தன் உந்துருளியிலிருந்து இறங்குவதற்கு முன்னர் உடலில் பல பாகங்களிலும் சரமாரியாக குத்துகின்றார்.

பலத்த கத்தி குத்திற்கு இலக்கான வசந்தன் கீழே சரிகின்றார்… வில்சனின் மனைவி வெளியே வருகை தந்து பார்த்த பின்னர் வீதியில் செல்லும் பல வாகனங்களை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றார்.

பயனளிக்கவில்லை… சிறிது நேரம் சென்றதும் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்படுகின்றது. அதில் வசந்தனை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலை செல்கிறாள் வில்சனின் மனைவி.

எனினும் செல்லும் வழியிலேயே உயிர்துறக்கின்றார் வசந்தன்.வில்சனின் மனைவியுடன் வசந்தன் தகாத உறவினை பேணி வருகின்றார் என வில்சன் கேள்வியுற்றதை தொடர்ந்து வில்சன் இதற்கு முன்னர் வசந்தனின் முச்சக்கர வண்டியையும் தீக்கிரையாக்கியுள்ளார்.

இந்நிலையில் வசந்தனை குத்திய நபரும் வில்சனாகவே இருக்க வேண்டும் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
close