57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.

பதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை பிரதேசத்தை சேர்ந்த பிம்பிசார திஸாநாயக்க என்ற 57 வயதான நபரே கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதியை பலவந்தப்படுத்தி பல முறை இந்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளார்.

அவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான குறித்த யுவதி தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இதற்கு முன்னர் துஸ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close