உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

யாழில் மின்கம்பத்துடன் மோதிய தனியார் பேருந்து.

யாழில் தனியார் பேருந்தொன்று மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
 குறித்த விபத்து இன்று அதிகாலை யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 இதன்போது பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்துக்குள்ளே அகப்பட்டு, நீண்ட நேர போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவேறு பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதற்கு முயற்சித்துள்ள வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
 இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.