யாழில் சொத்துக்காக மனநிலை குன்றியவருக்கு நடக்கும் அவலம். பகிருங்கள்.

யாழ் பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த குறித்த நபரின் பெயர் கந்தசாமி லிங்கேஸ்வரன். இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதுடன் இவரை இவரது பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருவதாக அறியவருகின்றது.

இது தொடர்பாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த (J411) பெண் கிராமசேவகருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன்கிடைக்கவில்லை.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன் குறித்த பிரிவுகளுக்கான அதிகாரிகளைக் கேட்டுள்ளனர். அதிகாரிகளின் கவனத்திற்கு போகும் வரை பகிருங்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close