பூநகரியில் உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள். ஒருவர் பலி.

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார்.

மன்னாரில் இருந்து இன்று காலை மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயனித்த வேலையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார், அதே நேரத்தில் பயணித்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.