உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் இருந்து யாழ் வந்தவருக்கு கொலை அச்சுறுத்தல்.

புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் கடன் பெற்று வெளிநாடு சென்ற நபர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இதனை அறிந்த கடன்கொடுத்தவர் நேரடியாக சென்று பணத்தை கேட்டுள்ளார்.

கடன் கொடுத்தவர் சில அடியாட்களுடன் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவரிடம் சென்று பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காது விட்டால் கொலை செய்து விடுவதாக எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் மீசாலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இருவரையும் தலா இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.