உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கிழக்கில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதல். 5 பேர் பலி.

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவர்களில் இரு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.

இரு பெண்களில் ஒருவர் மோதல் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்தபோது உயிரிழந்துள்ளார் மற்றய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேநேரம் பாதுகாப்பு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இணைப்பு 01
கல்முனை- சாய்ந்தமருது பகுதில் முஸ்லிம் தீரவாதுகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டை நிறைவுக்கு வந்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த மோதலில் 2 தற்கொலை தாக்குதல்கள் உட்பட 3 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் 3 பேர் காயமடைந்துள்ளனர்.