உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மே மாதம் 6ம் திகதிவரை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை..!

தொடா்ச்சியான தீவிரவாத தாக்குதல்களை தொடா்ந்து இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மே மாதம் 6ம் திகதியே ஆரம்பமாகும். என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தேடுதல் நடத்தியதன் பின்னர் பாடசாலைகள் 29ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

எனினும் நாட்டின் நிலைமை இன்னமும் சீராகாத நிலையில் மே மாதம் 6ஆம் திகதி மீள கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.