உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆலய அன்னதானம் சாப்பிட்ட 7 குழந்தைகள் உட்பட 42 போ் வைத்தியசாலையில்...

நல்ல தண்ணி - லக்ஸபான தோட்டப்பகுதியில் ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட அன்னதான உணவை உட்கொண்ட 42 போ் மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நல்லதண்ணி – லக்ஷ்பான தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிள்ளைகளுமே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்த தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அன்னதானத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என நல்லதண்ணி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உணவு விஷமானமை தொடர்பில் மஸ்கெலிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.