உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மீண்டும் கொச்சிக்கடையில் குண்டு வெடிப்புச் சம்பவம்.

கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள ரத்னம் ஒழுங்கையில், வாகனமொன்றில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குறித்த குண்டு வெடித்துள்ளது.

சற்று நேரத்திற்கு முன்னர் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.