தொடர் குண்டுவெடிப்பு! சமூக வலை தளங்களில் வெளியாகும் போலிப் புகைப்படங்கள்

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது உயிரிழந்தவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த இரண்டு படங்கள் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைததளங்களில் வைரலாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் போது 253 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குறித்து இரண்டு புகைப்படங்கள் போலியாக பரபரப்பட்டு வருகின்றது.

எனினும், இந்த இரண்டு புகைப்படங்களும் 2006ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி கெப்பிட்டிக்கொல்லாவவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலம் என தெரிவிக்கப்படுகின்றது.

2006ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து சக்தி வாய்ந்த கண்ணிவெடியில் சிக்கியதில் 15 குழந்தைகள் உள்பட 64 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.