உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! சொத்துக்களையும் முடக்குமாறு மைத்திரி அதிரடி

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் ஆகிய இயக்கங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.