உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஊரடங்கு வேளையில் துப்பாக்கி சூடு. தொழிலதிபர் மரணம்.

முல்லேரியா - ரனபிம மாவத்தையில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 38 வயதுடைய தொழிலதிபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து நேற்று இரவு 10 - 4 மணிவரை ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.