உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

எதுவும் நடக்கலாம் - பொதுமக்கள் தெரிந்திருக்கவேண்டிய எச்சரிக்கை தகவல்கள்

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர கால சட்டம் என்றால் என்ன

அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்

இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம்.

இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது.

இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம். அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாகும்.