உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கண்ணீர் வெள்ளத்தில் பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம்!!

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலம் இறுதி அஞ்சலியின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் மண்ணுடன் சங்கமமாகியுள்ளன.

மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரட்டை பெண் பிள்ளைகள் உட்பட பத்து பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சடலங்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டதுடன், பத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னர் சடலங்கள் புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இறுதி அஞ்சலி வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு பேரின் சடலங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் சடலங்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.