உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.

தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களில் பெண் ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் தற்பொது வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் 7 பேர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் பெயர்களை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அபு உபெய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு அல் பாரா, அபு முஹம்மத் மற்றும் அபு அப்துல்லா ஆகியோரே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டமையினால் அவர்களின் பெயர்களுக்கு முன்னால் அபு என்ற பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இந்தியா 2 சந்தர்ப்பங்களில் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் மேற்கொள்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலாவது எச்சரிக்கை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியும், தாக்குதல் இடம்பெறவிருந்த தினத்திற்கு முதல் நாளான ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி இரண்டாவது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெறக் கூடும் என இந்தியா எச்சரித்ததாக அமெரிக்காவின் CNN ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.