இன்றும் நாளையும் மிக அவதானமாக இருங்கள்.. அனல் வீசுமாம்..

யாழ்ப்பாணம், மன்னாா், வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கடுமையான வெப்பம் நிலவும் என காலநிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.

குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அதிகளவு நீரை அருந்த வேண்டும் என்றும், தங்களது பணியிடங்களில் தேவையான அளவு ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதே நேரம், முதியோர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அத்துடன், குழந்தைகளையும், சிறுவர்களையும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, அதிக பணிச்சுமையை தவிர்க்குதாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
close