உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. தந்தைக்கு வயது 13.

நேபாளத்தில் 14 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள நிலையில் அந்த குழந்தையின் தந்தையின் வயது 13 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்த சிறுவன் ரமேஷ் தமங் (13). இவன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த நிலையில் அதே பள்ளியில் பபித்ரா (14) என்ற சிறுமி படித்து வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் ரமேஷும், பபித்ராவும் காதலிக்க தொடங்கிய நிலையில் பபித்ரா கர்ப்பமானார்.

இதையடுத்து சமீபத்தில் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் இருவரிடமும் விசாரித்தனர், நேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20 என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது.

இதனால் ரமேஷ், பபித்ரா விடயத்தில் என்ன செய்வது என தெரியாமல் பொலிஸார் குழப்பத்தில் உள்ளனர்.

இதனிடையில் திருமண வயதை அடைந்ததும் பபித்ராவை ரமேஷ் திருமணம் செய்து கொள்வான் என அவன் சமூகத்தினர் கூறியுள்ளனர்.