உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு 16ம் திகதிவரை விளக்கமறியல்..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்களை வைத்திருந்த குறி்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பல்கலைகழக மாணவர்களையும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தில் இன்று காலை இராணுவம் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை வரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மாணவர்கள் இரவு யாழ்.நீதிவான் நீதிமன்றம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது இரு மாணவர்களையும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி கே.சயந்தன், கு.குருபரன், க.சுகாஸ் ஆகியோர் முன்னிலை ஆகினர்.