உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

16 வயது மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

16 வயதுடைய பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவரது தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டே தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.