உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அதிகவேகமாக சென்ற முச்சக்கரவண்டி 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்து!!

ஹட்டனில் இருந்து டிக்கோயா, ஒஸ்போன் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மதியம் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் ஹட்டன், அலுத்கல பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் ஒரு சிறிய குழந்தையோடு மொத்தம் மூன்று பேர் பயனித்துள்ளதாகவும் பின்னால் சென்ற எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் முச்சக்கர வண்டியின் அதிக வேகத்தின் காரனமாகவே இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பல்லத்தில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.