உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சகல மதுபான விற்பனை நிலையங்களுக்கும் 4 நாள் மூடு விழா..! கவலையில் மது பிாியா்கள்..

இலங்கை முழுவதும் மே-17ம் திகதி தொடக்கம் மே-20ம் திகதி வரையான 4 நாட்கள் சகல மதுபான நிலையங்களையும் பூட்டுமாறு மதுவாி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை மறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.