உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நாவாந்துறை பள்ளிவாசலில் இடம்பெற்ற மோதல் - அதிரடிப்படையினர் குவிப்பு!

யாழ்ப்பாணம்- நாவலர் வீதியில் உள்ள நாவாந்துறை பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகலால் நேற்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்ததால் முரண்பட்டுக் கொண்ட இரண்டு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

குழப்பம் விளைவித்த இரண்டு தரப்பினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பள்ளிவாசலை முற்றுகையிட்டனர்.

சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்தோருக்கும் பள்ளிவாசலைச் சேர்ந்தோருக்கும் இடையிலேயே இந்த முரண்பாடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.