உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நல்லூரில் நீண்ட நேரம் நின்ற மோட்டர் சைக்கிள். மக்கள் பதற்றம்!!

யாழ்.நல்லூர் பகுதியில் மிக நீண்டநேரமாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் பலர் வீடுகளை விட்டு தொலை தூரத்திற்கு வெளியேறிச் சென்றிருந்ததோடு அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டன.

இன்று காலையில் இருந்து நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் குறித்த நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் உரிமையாளர் எவரும் வருகை தராததால் அச்சமடைந்த மக்களும் அப்பகுதி வர்த்தர்களும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்து பாதுகாப்பை உறிதிப்படுத்தினர்.

எனினும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தராததால் மோட்டார் சைக்கிள் இருக்கையினை பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றதோடு உரிமையாளரை பொலிஸ் நிலையம் வரும்படி அறிவுறுத்துமாறு மக்களிடம் தெரிவித்துச் சென்றனர்.