யாழில் பிறந்து சிலமணி நேர சிசுவை குப்பையில் எறிந்த கொடூர தாய்!! நாய்கள் கடித்துக் குதறின!!

பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. உரப்பையில் போடப்பட்டிருந்த சிசுவை நாய்கள் கடித்து குதறியபோது,

வீதியால் பயணித்தவர்கள் அவதானித்து மீட்டபோது, சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.

வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

ஆள் நடமாட்டம் குறைந்த அந்த பகுதியில் உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக் கொண்டிருந்தது.

இதை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிசாருக்கு அறிவித்தனர்.

நெல்லியடி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது, சிசு ஒன்று உயிரிழந்த  நிலையில் இருந்தது. சிசுவின் கை கடித்து குதறப்பட்டிருந்தது.

பிறந்து சில மணி நேரமேயான சிசுவே வீதியில் வீசப்பட்டுள்ளது. சிசு உயிரிழந்த நிலையில் வீசப்பட்டதா அல்லது வீசப்பட்ட பின்னர் உயிரிழந்ததா என்பது தெரியவில்லை. பொலிசார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.