செல்ஃபியால் உயிரை விட்ட இளம்பெண். கொழும்பு கடற்கரையில் நடந்த சோகம்..!

ஆந்திர மாநிலபெண் மருத்துவர் கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு கடற்கரையில் தனது நண்பர்கள்களுடன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற போது தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையாபேட்டையை சேர்ந்த பெண் மருத்துவர் உத்குரு ரம்யா கிருஷ்ணன் ,இவர் கோவா 108 அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த ரம்யா கடந்த செவ்வாய்கிழமை கடற்கரையில் தனது நண்பர்களுடன் செல்பி எடுக்க தடைசெய்யபட்ட ஆபத்தான பகுதியில் நின்று புகைபடம் எடுக்க முயன்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக வேகமாக வீசிய அலையில் ரம்யா மற்றும் அவரது தோழி இருவரும் அலையால் இழுத்து செல்லபட்டனர், உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியதில் ஒருவர் மட்டும் மீட்கபட்டார் ஆனால் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருந்ததால் நீண்ட நேரத்திற்கு பின்னர் ரம்யா பிணமாக மீட்கபட்டதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


ரம்யாவின் தந்தை சில மாதங்களுக்கு முன்னர் தான் தவறியுள்ளார் எனவும், அவருடன் தாயார் , 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே இடத்தில் இரு வெவ்வேறு நபர்கள் செல்பி எடுக்க முயன்று பலியானதை அடுத்து இதை ஆபத்தான பகுதியாகவும் செல்பி எடுக்க தடை விதித்தும் அறிவிப்பு பலகைகள் வைக்கபட்டதும் குறிப்பிடதக்கது.