மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தாய்!!

பொலன்நறுவை, கிரித்தலே- சரணசிறிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளில் 4 வயதான சிறுமி ஜெயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலைமையில் இருக்கும் தாய் மற்றும் ஏனைய இரண்டு பிள்ளைகள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.