உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

அதிஉயர் பாதுகாப்புக்கு மத்தியில் வெசாக் பண்டிகை..!

வெசாக் பண்டிகை காலத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தை போல இந்த வருடமும் வெசாக் தின நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.

இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு பிரவேசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடமாடும் காவற்துறை சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.