இனிமையாக பேசி பிக்கப் பண்ணுவதில் இவர்கள் தான் டாப்..!

கடவுள் மனிதர்களுக்கு கொடுத்திருக்கும் அற்புதமான பரிசு என்றால் அது பேச்சுதான். நமது எண்ணங்களை வெளிப்படுத்த பேச்சு என்பது மிகவும் அவசியமாகும். நினைத்த காரியத்தை பேசியே சாதிப்பது என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒரு வரமாகும்.ஏனெனில் பேச்சுக்கும், பேச்சாற்றலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

மனதில் பட்டதை பேசுபவர்களை விட இனிமையாக பேசுபவர்களே தங்களுக்கு வேண்டிய காரியத்தை எளிதில் சாதிக்கிறார்கள் தற்போதைய உலகத்தில். இனிமையாக பேசுபவர்களுடன்தான் அனைவரும் பழகவே விரும்புவார்கள். இப்படி இனிமையாக பேச அவர்களின் ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் இனிமையாக பேசி காரியம் சாதிக்கும் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைத்திருக்கும் முக்கியமான பரிசுகளில் ஒன்று உரையாடல்களில் வெல்வதாகும், இதன்மூலம் எந்த விவாதத்தையும் இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இவர்களால் மாற்றிக்கொள்ள இயலும். சுவாரஸ்யமான தலைப்புகளை கூடுதல் சுவராஸ்யமாக மாற்ற இவர்களின் பேச்சாற்றலால் முடியும். இவர்கள் யாரிடமும் கீழ்ப்படிந்து பேசமாட்டார்கள்.அதனாலேயே இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட யாரும் விரும்பமாட்டார்கள்.

விருச்சிகம்
இனிமையான பேச்சாளர்களான விருச்சிக ராசிக்காரர்களிடம் இரண்டு திறமைகள் இருக்கிறது. இவர்கள் உள்ளுணர்வு மற்றும் எளிதில் மனதை மாற்றும்படி பேசுவது. என்ன பேசினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இவர்கள் முன்கூட்டியே கணக்கிடக்கூடியவர்கள். இவர்கள் பொய் கூறுவதை விரும்பமாட்டார்கள், எனவே இவர்களுக்கு தெரியாத மற்றும் ஆழமான விவாதங்களில் ஈடுபடமாட்டார்கள். இவர்களின் அமைதியும், பொறுமையும் இவர்களை இவர்களுக்கு சாதகமான முடிவை மற்றவர்களை எடுக்க வைக்க உதவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிக உணர்ச்சிவசப்பட மாட்டார்கள், நினைத்த காரியத்தை அடைய இனிமையாக பேசுவது மட்டும் போதாது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் தெரிய வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது இரண்டுமே கும்ப ராசிக்காரர்களுக்கு இருக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் அவர்கள் அடிக்கடி விவாதம் செய்பவர்களுடன் விவாதம் செய்ய விரும்புவார்கள். எப்படி பேசினால் சிறப்பான முடிவுகளை பெறலாம் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

துலாம்
இனிமையாகவும், பணிவாகவும் பேசுவது என்பது துலாம் ராசிகர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் குணம் இருக்கும். வசீகரம், வேடிக்கை மற்றும் நகைச்சுவை இவர்களின் கூடுதல் பலமான குணங்களாகும். துலாம் ராசிக்காரர்கள் அனைத்து தரப்பினருடனும் பேசி அவர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்புவார்கள், பெண்களை பேச்சாலேயே கவர்வது இவர்களுக்கு கை வந்த கலையாகும். இவர்கள் எதையும் ஆழமாக பேசமாட்டார்கள் ஆனாலும் இவர்கள் பேசும்விதம் அனைவருரையும் இவர்களை தேடி வரவைக்கும்.

தனுசு
இவர்கள் புதிய நபர்களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், முன்பின் தெரியத்தவர்களிடம் கூட இனிமையாக பேசுவதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். சிறந்த நகைச்சுவை உணர்வும், இவர்களின் நம்பிக்கையும் அனைவருக்கும் இவர்களை பிடிக்க வைக்கும். மற்றவர்களை கவர்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, ஆனால் இவர்களுக்கு பேசியே மற்றவர்களை கவர்வது எளிதானதாக இருக்கும். இவர்களை புண்படுத்தாத வரை இவர்களின் பேச்சின் வீரியம் குறையாமல் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் சமநிலையில் இருப்பார்கள். பேச்சிலும் அப்படித்தான், ஏனெனில் இவர்கள் பேசுவதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களா அதேபோல கவனிப்பதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். அதன்மூலம் நீங்கள் மகர ராசிக்காரர்களுடன் பேசும்போது ஒரு அர்த்தமுள்ள உரையாடலை செய்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும். இவர்களுடன் பேசும்போது இந்த உலகில் நீங்கள் இருவர் மட்டும்தான் இருப்பது போன்ற உணர்வு எழும். இவர்கள் பேசும்போது இவர்களின் கண்களை தாண்டி எங்கும் உங்கள் கவனம் செல்லாது.